Uncategorized

திருவள்ளுவர் யார்?

திருவள்ளுவர் யார்?

திருவள்ளுவர் யார் – என்னும் இப்புத்தகம் இதுகாறும் கவனிக்கப்படாத திருவள்ளுவர் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கிறது. மேலும் திருவள்ளுவர் மீது கட்டமைக்கப்பட்ட புனைக்கதைகளின் தோற்ற த்தினையும் அக்கதைகளின் அசலான பதிப்புகளையும் முழுமையாக ஆராய்கிறது. அந்த வகையில் திருவள்ளுவர் தனக்கான உண்மை வரலாற்றை புதியக் கோணத்தில் பார்க்கும் வாய்ப்பினை இப்புத்தகம் தருகிறது. திருவள்ளுவர் எவ்வாறு தனி மனத்தினை நிறுவியுள்ளார் என்பதை முதன் முறையாக ஆய்வுக் எடுத்துக் கொள்கிறது இந்தப் புத்தகம்.
200.00
தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்
தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்

தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்

தொல்மனித இனங்களைப் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன. இச்சூழலில் தமிழ் உலகில் தொல்மனித இனங்கள், சேப்பியன்கள், அவற்றின் இடப்பெயர்வுகள் பற்றிய தகவல்கள் சென்றடைய வேண்டிய தேவை இருக்கின்றது. இதில்..
  • -ஆப்பிரிக்காவிலிருந்து இடப்பெயர்வுகள்
  • -நியாண்டர்தால், டெனிசோவன் வகை மனிதகுலம்
  • -நவீன மனிதர்கள்
  • -வெவ்வேறு மனித குலங்களுக்கிடையே இனக்கலப்பு
  • -விவசாயக் குட்டத்தின் இடப்பெயர்வு
  • -ஸ்டெப்பி புல்வெளி - யம்னயா
  • -இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்
  • -இந்திய மரபியல் ஆய்வுகள்
  • -இந்திய சமூக அமைப்பு
இன்னும் பல தலைப்புக்களில் ஆராயப்படும் செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.
அறிவியல் துறையின் மரபணுவியல் தகவல்கள் தான் மனிதர்கள் தங்களையும். தங்களின் மூதாதையர்களையும். மக்களின் இடப்பெயர்வுகளையும் அறிந்து கொள்ள வழி வகுக்கும்.
180.00
பாதை அமைத்தவர்கள்

பாதை அமைத்தவர்கள்

வெளிநாடுகளில் இருப்பதைப்போல் பெண்களுக்கான அரங்கு (Hall of Fame) உள்ள பெண்கள் அருங்காட்சியகம் ஒன்று உருவானால் நிவேதிதா நூல்களில் உள்ள அனைத்துப் பெண்களும் அதில் இருப்பார்கள். பல முயற்சிகள் எடுத்து, பலர் உதவியுடன் விடாமல் தரவுகளைத் தேடி, பலர் பார்வைக்குப் பொதுவெளிக்கு இவர் கொண்டுவந்திருக்கும் பல பெண்கள் இந்த நூலில் உண்டு. திரைப்படம், பல துறை மருத்துவம், இசைக் கலை, நாட்டியம், எழுத்து, திரைப்பாடல், கல்வி, விமானப் படை பணி, உளவுத் தொழில், பட்டயக் கணக்கு, செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கு, செவிலியர் பணி என்று பல துறைகளில் செயல்பட்ட பெண்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் உயிர்ப்புள்ள மொழியில் கூறுகிறார். நாம் அறிந்த எழுத்தாளரான திலகவதியுடன் நிவேதிதா செய்த மிக நீண்ட நேர்காணல் அவரைப் பற்றிய பல புதுத் தகவல்களைத் தருகிறது. அவரை மனம் திறந்து பேச வைக்கிறார் நிவேதிதா. அவரும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறார். மிகவும் மனத்தை நெகிழ்த்தும் நேர்காணல் இது – அம்பை
300.00