Cart

No products in the cart.

தமிழ் மரபு அறக்கட்டளை

  • Home
  • Shop
அறியப்படவேண்டிய தமிழகம்

அறியப்படவேண்டிய தமிழகம்

தொல்லியல் அகழாய்வுகளிளும், செப்புப் பட்டயங்களிலும், கோயிற் சுவர்களிலும், மண்டபங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டு களிலும், ஓலைச்சுவடிகளிலும், சிற்பங்களிலும் பொதிந்து கிடக்கின்ற செய்திகளை ஆராய்வது மட்டும் தமிழினத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளப் போதுமானது அல்ல; மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாகத் திகழ்கின்ற, வழி வழியாக, தலைமுறை தலைமுறையாகக் கொண்டு சேர்க்கப்பட்ட இயல்பான நாட்டார் கதைகளும், இசை, நடன, நாடகக் கூத்துக் கலைகளும் தன்னுள்ளே கொண்டிருக்கின்ற செய்திகளை அலசுவதும், அவற்றைப் புரிந்துகொள்ள எடுக்கப்படும் முயற்சிகளும் கூட வரலாற்றுத் தகவல்கள்தான். இவை மட்டுமே வரலாற்றை அறிந்து கொள்ள போதுமா என்றால், இவற்றிற்கும் மேலாக சமூகத்தையும், தனி மனிதரையும் வாசித்துப் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகள், வரலாற்று ஆய்வுகளுக்கு ஏராளமான தரவுகளை வழங்க முடியும் என்பதைத் தனது ஆய்வுகளின் வழியாக வெளிப்படுத்தியவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள்
80.00
கீழடி வைகை நாகரீகம்

கீழடி வைகை நாகரீகம்

தமிழக வரலாறு, வரலாற்றுப்‌ பாதுகாப்பு, ஐரோப்பியத்‌ தமிழியல்‌,”தமிழ்ப்‌ பண்பாட்டு தேடல்கள்‌, தமிழ்‌ மக்கள்‌ புலம்பெயர்வு தொடர்பான ஆய்வு எனப்‌ பன்முகத்‌ தேடல்களுடன்‌ இயங்கி வரும்‌ முனைவர்‌.க.சுபாஷிணியின்‌ தொல்லியல்‌ அகழாய்வு குறித்த குழந்தைகளுக்கான நூல்‌ இது. ‘உலக நாகரிகங்களின்‌ வரிசை’ என்ற பொருளில்‌ இந்த நூல்‌ அடங்குகின்றது. தமிழின்‌ தொன்மைக்குப்‌ பெருமை சேர்க்கும்‌ கீழடி அகழாய்வுச்‌ செய்திகளை எளிய முறையில்‌ இளம்‌ சிறார்கள்‌ அறிந்து கொள்ளும்‌ வகையில்‌ இந்த நூல்‌ படைக்கப்பட்டூள்ளது. முனைவர்‌.க.சுபாஷிணி (ஜெர்மனி) தமிழ்‌ மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்‌ தலைவராகவும்‌ ‘கடிகை’ தமிழ்‌ மரபு முதன்மைநிலை இணையக்‌ கல்விக்‌ கழகத்தின்‌ இயக்குநராகவும்‌ செயல்படூகின்றார்‌. ஒரு பன்னாட்டு கணினி வர்த்தக நிறுவனத்தின்‌ ஐரோப்பியப்‌ பகுதி கணினி பொறியியல்‌ நிர்வாகப்‌ பிரிவின்‌ பொறுப்பாளராக பணிபுரியும்‌ இவர்‌ உலகளாவிய வகையில்‌ அருங்காட்சியகங்கள்‌, வரலாறு, தொல்லியல்‌ அகழாய்வு ஆகிய துறைகளிலும்‌ தொடர்ந்து செயல்பட்டு வருபவர்‌. தொல்லியல்‌ அகழாய்வு பற்றிய செய்திகளும்‌ தக்க தரவுகளுடன்‌ கூடிய தமிழர்‌ வரலாறும்‌ குழந்தைகளுக்கும்‌ சென்று சேரவேண்டும்‌ என்ற நோக்கத்துடன்‌ இந்த நூல்‌ வெளிவருகின்றது
199.00
தமிழர் புலப்பெயர்வு
தமிழர் புலப்பெயர்வு
Hot

தமிழர் புலப்பெயர்வு

உலகளாவிய தமிழரின் பயணங்களும், குடியேற்றங்களும் பற்றிய வரலாறு. தமிழர் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழ் நிலத்திலிருந்து புலம் பெயர்ந்திருக்கின்றனர். உலகத் தமிழரின் தொடர்ந்த பயணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா..?
  1. பண்டைய கிரேக்க ரோமானியரோடு வணிகம்
  2. பௌத்த சமய பரவலாக்கப் பின்னனி
  3. பல்லவர், சோழர், பாண்டியர் கால பயணங்கள்
  4. பொ.ஆ 14ஆம் நூற்றாண்டு கால பயணம் குறிப்பாக மரைக்காயர், லப்பை, சோளிய இஸ்லாமிய வணிகர்கள், தமிழ் வணிகர்களின் பயணங்களினால் ஏற்பட்ட புலம்பெயர்வு
  5. அச்சு இயந்திரம் - அச்சுப்பதிப்பாக்கம் உருவாக்கிய புலப்பெயர்வுகளுக்கான தேவைகள்
  6. அடிமை வணிகம் - இதன் வழி ஏற்பட்ட பேரளவிலான தமிழரின் பரவலான புலப்பெயர்வுகள்
  7. ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழரின் பரவலான புலப்பெயர்வுகள்
  8. யாழ்ப்பாணத் தமிழரின் ஆங்கிலேயர் காலனித்துவ கால புலப்பெயர்வுகள், இலங்கை போர் காலத்தில் ஏற்பட்ட புலப்பெயர்வுகள்..
  9. 20ஆம் நூற்றாண்டில் - பர்மா மக்கள் நாடு திரும்புதல், மத்திய கிழக்காசியா, ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மனியில் இந்திய நாடுகடந்த அரசு
  10. உலகத் தமிழாய்வுகளில் தனிநாயகம் அடிகளின் பங்களிப்புகள், அண்மைய புலம்பெயர்வுகள், இன்றைய நிலை
என 10 அத்தியாயங்களில் தமிழரின் 2500 ஆண்டுகால புலப்பெயர்வுகளை விவரிக்கின்றது இந்த நூல்.
500.00
திருவள்ளுவர் யார்?

திருவள்ளுவர் யார்?

திருவள்ளுவர் யார் – என்னும் இப்புத்தகம் இதுகாறும் கவனிக்கப்படாத திருவள்ளுவர் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கிறது. மேலும் திருவள்ளுவர் மீது கட்டமைக்கப்பட்ட புனைக்கதைகளின் தோற்ற த்தினையும் அக்கதைகளின் அசலான பதிப்புகளையும் முழுமையாக ஆராய்கிறது. அந்த வகையில் திருவள்ளுவர் தனக்கான உண்மை வரலாற்றை புதியக் கோணத்தில் பார்க்கும் வாய்ப்பினை இப்புத்தகம் தருகிறது. திருவள்ளுவர் எவ்வாறு தனி மனத்தினை நிறுவியுள்ளார் என்பதை முதன் முறையாக ஆய்வுக் எடுத்துக் கொள்கிறது இந்தப் புத்தகம்.
200.00
தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்
தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்

தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்

தொல்மனித இனங்களைப் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன. இச்சூழலில் தமிழ் உலகில் தொல்மனித இனங்கள், சேப்பியன்கள், அவற்றின் இடப்பெயர்வுகள் பற்றிய தகவல்கள் சென்றடைய வேண்டிய தேவை இருக்கின்றது. இதில்..
  • -ஆப்பிரிக்காவிலிருந்து இடப்பெயர்வுகள்
  • -நியாண்டர்தால், டெனிசோவன் வகை மனிதகுலம்
  • -நவீன மனிதர்கள்
  • -வெவ்வேறு மனித குலங்களுக்கிடையே இனக்கலப்பு
  • -விவசாயக் குட்டத்தின் இடப்பெயர்வு
  • -ஸ்டெப்பி புல்வெளி - யம்னயா
  • -இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்
  • -இந்திய மரபியல் ஆய்வுகள்
  • -இந்திய சமூக அமைப்பு
இன்னும் பல தலைப்புக்களில் ஆராயப்படும் செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.
அறிவியல் துறையின் மரபணுவியல் தகவல்கள் தான் மனிதர்கள் தங்களையும். தங்களின் மூதாதையர்களையும். மக்களின் இடப்பெயர்வுகளையும் அறிந்து கொள்ள வழி வகுக்கும்.
180.00