அறியப்படவேண்டிய தமிழகம்
₹80.00
தொல்லியல் அகழாய்வுகளிளும், செப்புப் பட்டயங்களிலும், கோயிற் சுவர்களிலும், மண்டபங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டு களிலும், ஓலைச்சுவடிகளிலும், சிற்பங்களிலும் பொதிந்து கிடக்கின்ற செய்திகளை ஆராய்வது மட்டும் தமிழினத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளப் போதுமானது அல்ல; மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாகத் திகழ்கின்ற, வழி வழியாக, தலைமுறை தலைமுறையாகக் கொண்டு சேர்க்கப்பட்ட இயல்பான நாட்டார் கதைகளும், இசை, நடன, நாடகக் கூத்துக் கலைகளும் தன்னுள்ளே கொண்டிருக்கின்ற செய்திகளை அலசுவதும், அவற்றைப் புரிந்துகொள்ள எடுக்கப்படும் முயற்சிகளும் கூட வரலாற்றுத் தகவல்கள்தான். இவை மட்டுமே வரலாற்றை அறிந்து கொள்ள போதுமா என்றால், இவற்றிற்கும் மேலாக சமூகத்தையும், தனி மனிதரையும் வாசித்துப் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகள், வரலாற்று ஆய்வுகளுக்கு ஏராளமான தரவுகளை வழங்க முடியும் என்பதைத் தனது ஆய்வுகளின் வழியாக வெளிப்படுத்தியவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள்