Shop

எட்டு நாய்க்குட்டிகள்

எட்டு நாய்க்குட்டிகள்

கொரானா காலத்தில் என் மகள் ஆலீஸுக்கான கதைப் புத்தகங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டது. திரும்பத் திரும்ப படித்த சொற்பம் சில கதைப் புத்தகங்களால் பதினாறு மாத வயதான ஆலீஸுக்கு பெரும் சலிப்பு ஏற்படவே, அவளுக்கான கதைத் தேடலில் இறங்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இந்த ஆறு சிறுகதைகளும் வெவ்வேறு தருணங்களில் அவளுக்காகச் சொல்லப்பட்டவையாகும். இப்போது முப்பது மாத வயதுடைய ஆலீஸுக்கு மிகவும் பிடித்த இந்தக் கதைகள் சிறுவர் சிறுமிகள் உட்பட அனைத்து வயதினரையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் என நான் நம்புகிறேன்.
80.00
எண் பெயர் #கட்டியங்காரன்
எண் பெயர் #கட்டியங்காரன்
Hot

எண் பெயர் #கட்டியங்காரன்

கொரோனா காலகட்டத்தில் பல இன்னல்களுக்கும் இழப்புகளுக்கும் உள்ளான கோடனகோடி மக்களின் வாழ்வியல் அணுபவங்களை பதிவுசெய்யும் விதமாகவும் விவாதிக்கும் விதமாகவும் அடுத்த பேரிடருக்கு நம்மை நாம் தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்னும் நோக்குடனே இத்தொகுப்பு புனையப்பட்டுள்ளது.
170.00
கீழடி வைகை நாகரீகம்

கீழடி வைகை நாகரீகம்

தமிழக வரலாறு, வரலாற்றுப்‌ பாதுகாப்பு, ஐரோப்பியத்‌ தமிழியல்‌,”தமிழ்ப்‌ பண்பாட்டு தேடல்கள்‌, தமிழ்‌ மக்கள்‌ புலம்பெயர்வு தொடர்பான ஆய்வு எனப்‌ பன்முகத்‌ தேடல்களுடன்‌ இயங்கி வரும்‌ முனைவர்‌.க.சுபாஷிணியின்‌ தொல்லியல்‌ அகழாய்வு குறித்த குழந்தைகளுக்கான நூல்‌ இது. ‘உலக நாகரிகங்களின்‌ வரிசை’ என்ற பொருளில்‌ இந்த நூல்‌ அடங்குகின்றது. தமிழின்‌ தொன்மைக்குப்‌ பெருமை சேர்க்கும்‌ கீழடி அகழாய்வுச்‌ செய்திகளை எளிய முறையில்‌ இளம்‌ சிறார்கள்‌ அறிந்து கொள்ளும்‌ வகையில்‌ இந்த நூல்‌ படைக்கப்பட்டூள்ளது. முனைவர்‌.க.சுபாஷிணி (ஜெர்மனி) தமிழ்‌ மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின்‌ தலைவராகவும்‌ ‘கடிகை’ தமிழ்‌ மரபு முதன்மைநிலை இணையக்‌ கல்விக்‌ கழகத்தின்‌ இயக்குநராகவும்‌ செயல்படூகின்றார்‌. ஒரு பன்னாட்டு கணினி வர்த்தக நிறுவனத்தின்‌ ஐரோப்பியப்‌ பகுதி கணினி பொறியியல்‌ நிர்வாகப்‌ பிரிவின்‌ பொறுப்பாளராக பணிபுரியும்‌ இவர்‌ உலகளாவிய வகையில்‌ அருங்காட்சியகங்கள்‌, வரலாறு, தொல்லியல்‌ அகழாய்வு ஆகிய துறைகளிலும்‌ தொடர்ந்து செயல்பட்டு வருபவர்‌. தொல்லியல்‌ அகழாய்வு பற்றிய செய்திகளும்‌ தக்க தரவுகளுடன்‌ கூடிய தமிழர்‌ வரலாறும்‌ குழந்தைகளுக்கும்‌ சென்று சேரவேண்டும்‌ என்ற நோக்கத்துடன்‌ இந்த நூல்‌ வெளிவருகின்றது
199.00