சிறுநல் வாழ்க்கை
₹180.00
புதியதாக ஒரு தகவல் கிடைக்கும் பொழுது, அது குறித்து வியந்து மேலும் அறிந்து கொள்ள விரும்புவது எவருக்கும் இயல்பு. தமிழணங்கு இதழில் வெளியாகி இங்கு நூல் வடிவம் பெற்ற கட்டுரைகள் சிலவும் அந்த வகையில் அடங்கும். அயல்நாட்டினர் எழுதிய இந்தியப் பயணக் குறிப்பு நூல்கள் குறித்த, ’18 ஆம் நூற்றாண்டின் இந்திய வரலாற்றுப் பதிவுகள்’ என்ற கட்டுரை; தீபாவளி என்ற சொல் தமிழிலக்கியத்தில் பதிவான காலம் குறித்த தேடலுக்குப் பின் உருவான ‘தீபாவளி என்ற சொல் எப்பொழுது தோன்றியது?’ என்ற கட்டுரை; சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை பாடலின் பொருள் விளக்கமாக அமையும் ‘ஆய்ச்சியர் குரவை’ கட்டுரை; ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த தொல்லியல் தடயமான புடைப்பு உருவங்கள் உள்ள ஒரு பானையோட்டில் முதலை ஒன்றும் இருக்கும் காட்சி குறித்து சங்க இலக்கியப் பாடல்களை மீளாய்வு செய்ததில் உருவான விலங்கியல் கட்டுரையான ‘இந்தியாவின் முதலை இனங்கள்’; சங்கப்பாடல்களில் எளிய மக்களின் வாழ்க்கை முறைகளைக் கூறும் சிறு நல் வாழ்க்கை என்ற கட்டுரை என்ற வகையில் இதுவரையில் நாம் இத்தகவல்களை அறிந்ததில்லையே என்ற எண்ணத்தை ஏற்படுத்துபவையாக அமைந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பாக அமைகிறது தேமொழியின் சிறு நல் வாழ்க்கை நூல்.