புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்த கதைகள்

177.00

இன்றைக்கு ‘மிஸ்டிக்’ என்று சொல்லக்கூடிய, பூடகத்தன்மைகொண்ட கதைகளை தமிழ்மொழியின் புராணங்களிலிருந்தும், தொன்மங்களிலிருந்தும் எடுத்துக்கொண்ட புதுமைப்பித்தன், முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறைகளுடன்கூடிய கதையாடலை உருவாக்கித் தந்துள்ளார். தமிழில் தற்போதுவரை, மிகப்பெரிய அளவில் பரிசோதித்துப் பார்க்காத திருவிளையாடல் புராணக்கதைகள், ராமாயணத்தின் அகலிகை, கபாடபுரம் போன்ற படைப்புகள் கற்பனைத்திறத்தால், முற்றிலும் மாறுபட்ட வடிவத்தையும், நவீனத்தன்மையையும் கொண்டதாக விளங்குகின்றன.