பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களின் சுருக்கம்

160.00

ஐந்து பாகங்களைக் கொண்ட பெரிய நாவல்களை இன்றைய இளைய தலைமுறை படிப்பதில்லை. குறைந்த பக்கங்கள் உள்ள புத்தகங்களையே விரும்புகிறார்கள்.இந்தக் காலத் தலைமுறையினர் பொன்னியின் செல்வனை விரைவாகப் படிக்கும் வண்ணமும். படித்தால் எளிதில் புரியும் வண்ணமும் சுருக்கமாக அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.கல்கி நாவலை உரையாடல்கள் மூலம் நகர்த்திச் சொல்கிறார். அதை மூலத்தைப் படித்துதான் அனுபவிக்க வேண்டும். காதல், நகைச்சுவை, குத்தல், அச்சம், எதிரிகளை வார்த்தைகளால் மடக்குதல், வரலாற்றை விவரித்தல் என்று அவர் கதையைக் கொண்டுபோகும் முறை அருமையாக இருக்கும்.இந்தச் சுருக்கமான நூலைப் படிப்பதன் மூலம் இன்றையத் தலைமுறையினர். கல்கியின் முழுமையான நாவலைத் தேடிச் சென்று, ஒரு வரி விடாமல் ரசித்துப் படிக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை, அது நிகழ்ந்தால் இந்தச் சுருக்கம் எழுதப்பட்ட நோக்கம் நிறைவேறும்.