பொன்னியின் செல்லச் சிட்டு

33.00

சிறுமி பொன்னியின் வீட்டில் சிட்டுக்குருவிகள் கூடு வைத்து குஞ்சு பொரிக்கின்றன. சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல எலி, பல்லி போன்றவையும் அவர்களுடைய வீட்டில் இனப்பெருக்கம் செய்வதை பொன்னி ஆவலுடன் பின்தொடர்கிறாள். இந்த உயிரினங்களையெல்லாம் பார்த்து வளரும் வீட்டை விட்டு பொன்னி ஒரு நாள் பிரிய நேரிடுகிறது. புதிய வீட்டுக்கு அவர்களுடைய குடும்பம் குடிபெயர்கிறது. அங்கே நடக்கும் ஒரு சம்பவம் பொன்னியை உயிர் உலகத்துக்கு இன்னும் நெருக்கமாக மாற்றுகிறது. அங்கே பொன்னியை வரவேற்றது யார் தெரியுமா? புதிய வீட்டில் அப்படி என்னதான் நடந்தது?