பாதை அமைத்தவர்கள்

300.00

வெளிநாடுகளில் இருப்பதைப்போல் பெண்களுக்கான அரங்கு (Hall of Fame) உள்ள பெண்கள் அருங்காட்சியகம் ஒன்று உருவானால் நிவேதிதா நூல்களில் உள்ள அனைத்துப் பெண்களும் அதில் இருப்பார்கள். பல முயற்சிகள் எடுத்து, பலர் உதவியுடன் விடாமல் தரவுகளைத் தேடி, பலர் பார்வைக்குப் பொதுவெளிக்கு இவர் கொண்டுவந்திருக்கும் பல பெண்கள் இந்த நூலில் உண்டு. திரைப்படம், பல துறை மருத்துவம், இசைக் கலை, நாட்டியம், எழுத்து, திரைப்பாடல், கல்வி, விமானப் படை பணி, உளவுத் தொழில், பட்டயக் கணக்கு, செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கு, செவிலியர் பணி என்று பல துறைகளில் செயல்பட்ட பெண்களைப் பற்றிய எல்லாத் தகவல்களையும் உயிர்ப்புள்ள மொழியில் கூறுகிறார்.
நாம் அறிந்த எழுத்தாளரான திலகவதியுடன் நிவேதிதா செய்த மிக நீண்ட நேர்காணல் அவரைப் பற்றிய பல புதுத் தகவல்களைத் தருகிறது. அவரை மனம் திறந்து பேச வைக்கிறார் நிவேதிதா. அவரும் எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்கிறார். மிகவும் மனத்தை நெகிழ்த்தும் நேர்காணல் இது – அம்பை

Category: