நிமாய் கோஷ்
₹190.00
டாக்காவில் பிறந்து வங்காளத்தை தாய்மொழியாகக் கொண்ட நிமாய் கோஷ் ( 1914-1988) தமிழகத்தைத் தனது இரண்டாம் தாயகமாய்க் கொண்டார். அவர் இயக்கிய சின்னமூல் வங்கப்படம் இந்திய சினிமாவில் திருப்புமுனையாக இன்றளவும் கருதப்படுகிறது. அவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் தமிழ்ப்படமான பாதை தெரியுது பார்– தமிழன் ஆரம்பகால யதார்த்தப் படம் என்கிற அடையாளத்தைப் பெற்றுள்ளது. சினிமா சங்கங்களை நிறுவி அவற்றின் வாயிலாக மக்களிடையே சினிமா ரசனையை போதித்தார். சிறந்த ஒளிப்பதிவாளர் என்று அவர் போற்றப்பட்டாலும் பொதுவுடமை சார்ந்த நடவடிக்கைகளுக்காக திரையுலகினரால் ஒதுக்கப்பட்டார். தமிழ் நாட்டில் திரைப்படத்தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி அவர்களது உழைப்பிற்கேற்ற ஊதியத்தை நிர்ணயம் செய்ததிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். நிமாய்தா என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட ஓர் அபூர்வமான திரைக்கலைஞரின் வரலாறான இந்நூல் தமிழ் சினிமாவின் எவரும் தவறவிடக்கூடாத ஒரு முக்கிய கட்டத்தின் பதிவாகவும் விளங்குகிறது.